லெஸ்பியன் கதைக்களம் கொண்ட 'ஹோலி வுண்ட்’: ஆக.12-ல் ஓடிடியில் வெளியாகிறது

லெஸ்பியன் கதைக்களம் கொண்ட 'ஹோலி வுண்ட்’:  ஆக.12-ல் ஓடிடியில் வெளியாகிறது

பெண் ஓரினச்சேர்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘ஹோலி வுண்ட்’ திரைப்படம் ஆக.12-ம் தேதி எஸ்எஸ் பிரேம்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.

ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவருக்கு இடையோன உறவுச்சிக்கலை சொல்லும் படங்கள் இந்தியாவில் சமீபகாலமாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அந்த வரிசையில் ‘ஹோலி வுண்ட்’ படமும் சேர்ந்துள்ளது. சிறு வயதில் அன்பாக வளர்ந்த இரண்டு சிறுமிகள் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் சந்தித்து, உடலாலும் உள்ளத்தாலும் ஒன்றாக வாழ்வில் இணைகிறார்கள் என்பது தான் இந்த படத்தின் கதை.

ஜானகி சுதீர், அம்ரிதா வினோத் மற்றும் சாபு பிரவுதீன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள’ ஹோலி வுண்ட்’ படம் ஆக.12-ம் தேதி வெளியாகிறது. அசோக் ஆர். நாத் இயக்கியுள்ள இந்தப் படத்தின் கதையை பால் விக்லிஃப் எழுதியுள்ளார். பெண் ஓரினச்சேர்க்கை உறவை சுற்றி அமைக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு ரோனி ரஃபேலின் இசையமைத்துள்ளார். உன்னி மடவூர் ஒளிப்பதிவு செய்துள்ளார். விபின் மன்னூர் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார். ஆர்.சந்தீப் தயாரித்துள்ள இந்த படம் ஆக.12-ம் தேதி எஸ்எஸ் பிரேம்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in