லெஸ்பியன் பட நடிகையின் அரை நிர்வாணப் படங்கள்: கேரளத்தில் பரபரப்பு!

ஜானகி சுதீர்
ஜானகி சுதீர்

அசோக் ஆர்.நாத்தின் இயக்கத்தில், ஜானகி சுதீர், அம்ருதா உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘ஹோலி ஊண்ட்’ (Holy Wound) எனும் மலையாளத் திரைப்படம், ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. லெஸ்பியன் (பெண் தன்பாலின உறவு) கதையாக வெளியாகியிருக்கும் இப்படத்துக்குப் பல்வேறு தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்திருக்கின்றன.

இந்நிலையில், இப்படத்தின் நாயகிகளில் ஒருவரான ஜானகி சுதீர், அரை நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். மேலாடை அணியாமல், நகைகளை மட்டும் அணிந்தபடி போட்டோஷூட் நடத்தி அந்தப் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தனது நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். அதையடுத்து தமிழ் நடிகர் விஷ்ணு விஷாலும் தன்னுடைய அரை நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்டார். இருவரும் கடும் எதிர்ப்பையும் ஆதரவையும் சந்தித்தனர்.

இந்நிலையில், ஜானகி சுதீர் வெளியிட்டிருக்கும் அரை நிர்வாணப் புகைப்படங்களும் கடும் கண்டனங்களை எழுப்பியிருக்கின்றனர். ஒரு சிலர் அவருக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

இதற்கிடையே, ‘ஹோலி ஊண்ட்’ பட விளம்பரத்தின் ஒரு பகுதியாக ஜானகி சுதீர் பல நேர்காணல்களில் பங்கேற்றார்.
“எல்லோருக்கும் நேர்மறையாகச் சொல்லி இந்தச் சமூகத்தில் வாழ முடியாது. நான் என் உரிமையைச் செய்கிறேன். தேவையானவர்கள் எடுத்துக்கொள்வார்கள். இல்லாதவர்கள் எதிர்வினை செய்வார்கள்” என்று அவற்றில் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in