யோகிபாபுவின் `கஜானா’வில் ஹாலிவுட் கலைஞர்கள்

யோகிபாபுவின் `கஜானா’வில் ஹாலிவுட் கலைஞர்கள்

யோகிபாபு நடிக்கும் ’கஜானா’ படத்தில் ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றுகின்றனர்.

காமெடி நடிகர் யோகி பாபு முதல் முறையாக, பான் இந்தியா திரைப்படத்தில் நடிக்கிறார். ‘இண்டியானா ஜோன்ஸ்’, ‘நேஷ்னல் டிரஸ்சர்’ போன்ற சாகச ஹாலிவுட் படங்களுக்கு இணையான, மாயமந்திர காட்சிகளும், யானை, புலி, பாம்பு போன்ற மிருகங்களின் சாகசக் காட்சிகளோடு உருவாகும் படம், கஜானா. இந்தப் படத்துக்கு முதலில் வீரப்பனின் கஜானா என்று டைட்டில் வைத்திருந்தனர். இப்போது கஜானா என்று மாற்றியுள்ளனர்.

வேதிகா
வேதிகா

இதில், வேதிகா முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். அவர் அதிரடி ஆக்‌ஷன் காட்சியிலும் நடித்துள்ளார். ரசிகர்களை வியக்க வைக்கும் வகையில் இந்தக் காட்சிகள் இருக்கும் என்கிறது படக்குழு. இனிகோ பிரபாகர், சாந்தினி, யோகி பாபு, பிரதாப் போத்தன், வேலு பிரபாகரன், ராஜேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஃபோர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப்படத்தின் கதை, திரைக்கதை, எழுதி, பிரபாதிஸ் சாம்ஸ் இயக்குகிறார்.

கிராபிக்ஸ் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாகும் இந்தப்படத்தில் ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்ற இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in