மீண்டும் ஒன்று சேர்ந்த காட்ஸில்லா x காங்... தியேட்டரை தெறிக்க விட்ட ரசிகர்கள்!

மீண்டும் ஒன்று சேர்ந்த காட்ஸில்லா x காங்... தியேட்டரை தெறிக்க விட்ட ரசிகர்கள்!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் ஹாலிவுட் சாகசப் படங்களை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. அதிலும் தீயவற்றை எதிர்த்து விலங்குகளை சாகசங்கள் செய்ய வைத்து ஹீரோவாக்கிய ஹாலிவுட் படங்கள் குழந்தைகளின் ஆல் டைம் ஃபேவரிட். அப்படி வெளியாகி வெற்றிப் பெற்றதுதான் காட்ஸில்லா, கிங் காங் தொடர் படங்கள்.

இந்த வரிசையில் ‘காட்ஸில்லா x காங்: தி நியூ எம்பயர்’ படம் நேற்று வெளியாகியுள்ளது. இது ’காட்ஸில்லா vs காங்’ (2021) படத்தின் தொடர்சி. இது காட்ஸில்லா உரிமையின் 38வது படம் மற்றும் கிங் காங் உரிமையின் 13வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் குயின்ஸ்லாந்தில் இந்தப் படம் படமாக்கப்பட்டுள்ளது.

காட்ஸில்லா மற்றும் காங் மர்மமான ஹாலோ எர்த்தின் டைட்டன் அச்சுறுத்தலுக்கு எதிராக ஒன்று சேர்கின்றன. அப்படி ஒன்று சேரும் கதையில் அங்கங்கே நெஞ்சை வருடும் எமோஷன், சிரிப்பூட்டும் வசனங்கள், பிற்பாதியில் வழக்கமான ஆக்‌ஷன் சாகசங்களோடு கதையை நகர்த்தி இருக்கிறார்கள்.

காங் வசிக்கும் ஹாலோ எர்த்துக்கும் காட்ஸில்லா இருக்கும் சர்ஃபேஸ் எர்த்துக்கும் வில்லன் டைட்டனால் அச்சுறுத்தல் நேர்கிறது. அங்கும் கெட்ட காட்ஸில்லா வில்லன் கேங்கில் இருக்கிறது. மேலும், டைட்டன் காங் படை ஒன்றை அடிமையாக்கி வைத்திருக்கிறது. முதலில் தனியாளாக இதனை எதிர்க்கும் காங் பாதிப்படைகிறது. பின்பு, இது எவ்வளவு பெரிய அச்சுறுத்தல் என்பதை உணரும் காங், காட்ஸில்லாவுடன் இதை எதிர்த்து சண்டை செய்கிறது.

இறுதியில் காங், காட்ஸில்லா வெற்றி பெற்றதா, ஹாலோ எர்த்தும், சர்ஃபேஸ் எர்த்தும் காப்பாற்றப்பட்டதா என்பதை கண்களுக்கு விருந்தளிக்கும் விஎஃப்எக்ஸ் காட்சிகள் மற்றும் பரபரக்கும் ஆக்‌ஷன் பிளாக்கோடு இயக்கி இருக்கிறார் ஆடம் விங்கார்ட்.

குட்டி காங்
குட்டி காங்

முதல் பாதியில் சர்பேஸ் உலகில் காங் தன்னையும் மனிதர்களுடன் இணைத்துக் கொண்டு வாழ்கிறது. பல்லுக்கு டாக்டரை வைத்து வைத்தியம் பார்ப்பது, பழங்குடியின சிறுமியிடம் நெருக்கம் காட்டுவது என இருக்கிறது காங். குறிப்பாக, காங்குடன் டைட்டன் கேங்கில் இருந்து குட்டி காங் ஒன்றையும் இதில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். முதலில் காங்கை சிக்கலில் மாட்ட வைக்கும் இந்த குட்டி காங், பின்பு காங்கின் நல்ல மனதை புரிந்து கொண்டு அதனுடன் அன்பு காட்டுவது நெகிழ்ச்சி.

காங், குட்டி காங்கின் தருணங்கள், ஆங்காங்கே கிச்சு கிச்சு மூட்டும் தருணங்கள், ஹாலோ எர்த்தின் கண்ணை கொள்ளை அடிக்கும் விஎஃப்எக்ஸ் காட்சிகள் என முதல் பாதி இருந்தாலும் திரைக்கதை சற்றே மெதுவாகதான் நகர்கிறது.

டைட்டன்
டைட்டன்

வில்லன் யார், காங்கும், காட்ஸில்லாவும் எந்த சிக்னலுக்காக ஆக்‌ஷன் அவதாரம் எடுக்கின்றன என்ற மையக்கதையைத் தெரிந்து கொள்ளவே நீண்ட நேரம் எடுக்கிறது. சிஜி பணிகளும், கிளைமேக்ஸில் வரும் அதிரடி சண்டைக் காட்சிகளுக்கும் திரையரங்கில் கிளாப்ஸ் பறக்கிறது. ஆனால், இரண்டாம் பாதி முழுக்க அதிகம் ஆக்‌ஷனில் கவனம் செலுத்தி கதையில் கோட்டை விட்டிருக்கிறார்கள்.

காங்கின் அறிமுக காட்சி, ஆக்ரோஷமாகவே அலையும் காட்ஸில்லா, பில்டப் கொடுக்கும் ஹீரோயிஸம், வில்லனால் மக்களுக்கு பிரச்சினை அதை எதிர்க்கும் டபுள் ஹீரோக்களுக்கு இறுதியில் கிடைக்கும் வெற்றி என வழக்கமான கதைதான் இதிலும். ஆனால், குறையை மறக்க வைக்கும் சிஜி மற்றும் சிறப்பான ஆக்‌ஷன் காட்சிகளை வைத்து ஒப்பேத்தி இருக்கிறார்கள். ஆனால், இந்த கோடை விடுமுறைக்கு குழந்தைகளைக் கவரும் படமாக ‘காட்ஸில்லா x காங்: தி நியூ எம்பயர்’ இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இதையும் வாசிக்கலாமே...    

அண்ணாமலை முன்னிலையில் பாஜகவினர் மோதல்... கடலூரில் பரபரப்பு!

கமல் படத்திற்காக பிணத்திற்கு மேக்கப் போட்ட டேனியல் பாலாஜி!

பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை... வெளியானது அதிர்ச்சி வீடியோ!

ஆடுஜீவிதம் - சினிமா விமர்சனம்

மின்கம்பத்தில் மோதி சிதறிய இருசக்கர வாகனம்... கபடி வீரர்கள் இருவர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in