பிரபல ஹாலிவுட் நடிகை ‘குட்ஃபெலாஸ்’ சூஸன் ஷெப்பர்ட் மறைந்தார்

சூஸன் ஷெப்பர்ட்
சூஸன் ஷெப்பர்ட்

‘குட்ஃபெலாஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களின் வாயிலாக அமெரிக்காவுக்கு அப்பாலும் ரசிகர்களை ஈர்த்திருந்த நடிகை சூஸன் ஷெப்பர்ட் தனது 89 வயது காலமானார்.

1934-ல் பிறந்த சூஸன், ஜூலிய ராபர்ட்ஸின் ரொமான்ஸ் நகைச்சுவை திரைப்படமான ’மிஸ்டிக் பிஸ்ஸா’வில் (1988) அறிமுகமானார். தொடர்ந்து ‘அங்கிள் பக்’, ’செகண்ட் சைட்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவருக்கு ’குட்ஃபெலாஸ்’ திரைப்படம் பெயர் வாங்கித் தந்தது.

சூஸன் ஷெப்பர்ட்
சூஸன் ஷெப்பர்ட்

திரைப்படங்கள் நடித்தது மட்டுமன்றி நாடகங்கள் மற்றும் ஓடிடி படைப்புகளிலும் தனது திறமைக்குத் தீனியிடும் கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக இளம்தலைமுறையினருக்கு நடிப்பு பயிற்சியாளராகவும் சூஸன் இருந்துள்ளார்.

விரைவில் வெளியாகவிருக்கும் 'எ கிஃப்ட் ஆஃப் ஃபயர்’ என்ற ஆவணப்படம், சூஸனின் நடிப்புப் பயிற்சியாளார் முகத்தை உலகுக்கு விரிவாக காட்ட இருக்கிறது.

ஹெச்பிஓ தயாரிப்பான ’தி சோப்ரானோஸ்’, சூஸனுக்கான ஓடிடி மேடையின் மைல்கல்லானது. ’டர்ட்டி ஷேம்’ (2004), ’ஹரோல்ட்’ (2008 ), ’தி வீக் ஆஃப்' (2018), ’ஜேக்கப்ஸ் லேடர்’ (1990), ’ட்ரீஸ் லவுஞ்ச்’ (1996), 'லொலிடா' (1997), 'அமெரிக்கன் குசைன்' (1998), 'லிவிங் அவுட் லவுட்' (1998), 'ரிக்விம் ஃபார் எ ட்ரீம்' (2000) உள்ளிட்ட படங்களில் நடித்ததில், ஹாலிவுட் ரசிகர்களின் இதயங்களில் சூஸன் ஷெப்பர்ட் என்றும் வாழ்வார்.

சூஸன் ஷெப்பர்ட்
சூஸன் ஷெப்பர்ட்

மகள் கேட் ஷெப்பர்ட், மருமகன் மைல்ஸ் மெக்மானஸ் மற்றும் பேத்தி இசபெல் ஷெப்பர்ட் ஆகியோருடன் நியூயார்க்கில் அமைதியாக வாழ்ந்து வந்த சூஸன், வயது முதிர்வு தொடர்பான உடல்நல பாதிப்புகளால் நவ.17 அன்று காலமானார்.

இதையும் வாசிக்கலாமே...


மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது... 4 மணி நேரம் அவகாசம் தர்றேன்... நடிகர் சங்கத்தை எச்சரித்த மன்சூர் அலிகான்!

உத்தராகண்ட் சுரங்க விபத்து; 41 தொழிலாளர்களின் நிலை என்ன? வெளியானது வீடியோ

பரபரப்பு.. வைரமுத்துவை மகளிர் ஆணையம் விசாரிக்க வேண்டும்... ஹெச்.ராஜா வலியுறுத்தல்!

இறப்புக்கு முன் நடிகர் மாரிமுத்து வெளியிட்ட வீடியோ... ரசிகர்கள் உருக்கம்!

ரூ.1,760 கோடி பணம், மதுபானம் பறிமுதல்! தேர்தல் ஆணையம் அதிரடி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in