அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்து பற்றி எரிந்த கார்: பிரபல நடிகைக்கு தீவிர சிகிச்சை

அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்து பற்றி எரிந்த கார்: பிரபல நடிகைக்கு தீவிர சிகிச்சை

கார் தீப்பிடித்து எரிந்ததில் படுகாயமடைந்த பிரபல நடிகைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிரபல ஹாலிவுட் நடிகை அன்னே ஹெச் (Anne Heche). இவர் வால்கோனா, ஐ நோ வாட் யு டிட் லாஸ்ட் சம்மர், வாக் த டாக், சிக்ஸ் டேஸ் செவன் நைட்ஸ், சைக்கோ, கேட்ஃபைட், தி லாஸ்ட் வேர்ல்ட் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். அமெரிக்க டிவி தொடரான ’அனதர் வேர்ல்ட்’-டில் இரண்டு கேரக்டர்களில் நடித்து பிரபலமானவர் இவர்.

ஸ்டிரெச்சரில் கொண்டு செல்லப்படும் நடிகை அன்னே ஹெச்
ஸ்டிரெச்சரில் கொண்டு செல்லப்படும் நடிகை அன்னே ஹெச்

இவர் தனது மினி கூப்பர் காரில், லாஸ் ஏஞ்சல்ஸின் புறநகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். கார் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக சாலையில் இருந்து விலகிய கார், ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது. வீட்டின் முன்பகுதியும் தீப்பிடித்து எரிந்து சேதமானது.

தகவலறிந்து விரைந்து வந்த 60க்கும் மேற்பட்டத் தீயணைப்புத் துறையினர் தீயை போராடி அணைத்தனர். இந்த விபத்தில் நடிகை அன்னே ஹெச் படுகாயமடைந்தார். அவருடைய முதுகு பகுதியில் அதிகமான தீக்காயங்கள் ஏற்பட்டன. அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதிக வேகம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாகவும் அவர் மது அருந்துவிட்டு கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. போலீஸார் இதை உறுதிப்படுத்தவில்லை. வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல நடிகை கார் விபத்தில் சிக்கிய சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in