‘விக்ரம்’ படத்தில் கெஸ்ட் ரோலில் இளம் நாயகி

‘விக்ரம்’ படத்தில் கெஸ்ட் ரோலில் இளம் நாயகி

கமல்ஹாசனின் ’விக்ரம்’ படத்தில் இளம் நாயகி ஒருவர் கெஸ்ட் ரோலில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தை அடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம், ’விக்ரம்’. கமல்ஹாசன் நடிக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், நரேன் உள்பட பலர் நடிக்கின்றனர். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஷான்வி ஸ்ரீவஸ்தவா
ஷான்வி ஸ்ரீவஸ்தவா

இந்தப்படத்தின் டீஸரும், கிளிம்ப்ஸும் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பைப் பெற்றன. படம் ஜூன் 3-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுகிறது. இந்தப் படத்தை, தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பான் இந்தியா முறையில் வெளியிட இருப்பதாகக் கூறப்படுகிறது.

படத்தின் புரமோஷன் வேலைகள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்நிலையில் படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்துவரும் ஷான்வி ஸ்ரீவஸ்தவா நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கெஸ்ட் ரோலில் நடித்துள்ள இவர், தெலுங்கில் 'அட்டா','மாஸ்டர் பீஸ்' உட்பட சில படங்களில் நடித்துள்ளார். கன்னடத்தில், 'சந்திரலேகா', 'அவனே ஸ்ரீமன்நாராயணா' உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in