‘வீரன் - மின்னல் முரளி’ இடையிலான 6 வித்தியாசங்கள் விரைவில் வெளிப்படுமா?

தமிழ் ’வீரன்’ - மலையாள ’மின்னல் முரள்’
தமிழ் ’வீரன்’ - மலையாள ’மின்னல் முரள்’

மின்னல் முரளி திரைப்படத்தை நினைவூட்டும் ஹிப்ஹாப் ஆதியின் ’வீரன்’ திரைப்படம், ஜூன் 2 அன்று வெளியாக இருக்கிறது. இதன் மூலம் இந்த 2 படங்களையும் ஒப்பிடும் ரசிகர்களின் ஐயங்களுக்கு முடிவு காணப்படலாம்.

தமிழில் தனிப்பட்ட சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் மிக அரிது. வழக்கமான திரைப்படங்களின் ஹீரோயிசமே, சூப்பர் ஹீரோ சாகசங்களை தூக்கிச் சாப்பிடக்கூடியவை என்பதால், தனியாக சூப்பர் ஹீரோ படங்கள் அவசியமாகவில்லை. அந்தளவுக்கு யதார்தத்துக்கு பொருந்தாது, சாமானியர்களின் கதையிலும் சூப்பர் ஹீரோ சாகசங்களை திணித்தி வெறுப்பேற்றி இருப்பார்கள். மாஸ் ஹீரோ பிம்பத்துக்கு ஆசைப்படும் அனைத்து ஹீரோக்கள் மத்தியிலும் இந்த அபிலாஷைகள் அதிகம் உண்டு.

இவற்றுக்கு அப்பால் மிஷ்கின் இயக்கிய ’முகமூடி’ போன்ற ஒரு சில சூப்பர் ஹீரோ திரைப்படங்களும், ஹாலிவுட் தாக்கத்தில் வந்ததாலும், மேற்குறிப்பிட்ட வறட்டு சாகச படங்களுடன் வேறுபட முடியாததாலும் தோல்வியை தழுவின. இவற்றுக்கு மாறாக, மண்ணின் மைந்தனாக ஒரு சூப்பர் ஹீரோவை உருவாக்க முடியுமா என்ற கேள்விக்கு, கேரளத்தில் இருந்து பதில் கிடைத்தது.

டொவினோ தாமஸ் நடிப்பில், 2021, கிறிஸ்துமஸ் வெளியீடாக நெட்ஃபிளிக்ஸில் வெளியான ’மின்னல் முரளி’ திரைப்படம் இந்த எதிர்பார்ப்புகளை நிறைவு செய்தது. சாமானியர்கள் மத்தியிலிருந்து புறப்படும் ஒரு சூப்பர் ஹீரோவை மண்ணின் மைந்தனாக ஏற்றுக்கொள்ளும் வகையில் மின்னல் முரளி சித்தரித்திருந்தது. தமிழிலும் வெளியான அந்த திரைப்படத்துக்கு உரிய வரவேற்பு கிடைத்தது.

’வீரன்’ ஆதி
’வீரன்’ ஆதி

தமிழில் ஒரு சூப்பர் ஹீரோ என்ற பிரகடனத்தோடு, ஹிப்ஹாப் ஆதி நடிப்பிலான ‘வீரன்’ திரைப்படத்துக்கான அறிவிப்பு வெளியானது முதலே, அது மலையாளத்தின் மின்னல் முரளியுடன் அதிகம் ஒப்பிடப்பட்டு வருகிறது. மலையாள மின்னல் முரளிக்கும், தமிழ் வீரனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என, ’வீரன்’ இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணன் தொடர்ந்து மறுத்து வருகிறார். ஏற்கனவே ’மரகத நாணயம்’ படத்தின் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் என்பதால் அவர் கூற்றை தற்போதைக்கு மறுதலிக்க இயலாது.

ஆனால், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தொடங்கி, படத்தலைப்பு வரை ‘வீரனின்’ சகலமும் மின்னல் முரளியை நினைவூட்டியே வருகின்றன. இதனால் எப்போது வீரன் திரைப்படம் வெளியாகும், இந்த சர்ச்சைக்கு முடிவு காணப்படும் என்ற எதிர்பார்ப்பு உருவானது. அதற்கேற்ப ஜூன் 2 அன்று, வீரன் வெளியீட்டு விவரத்தை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தோடு, ’சிவகுமாரின் சபதம்’, ’அன்பறிவு’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைகிறார் ஹிப்ஹாப் ஆதி. வழக்கம்போல வீரனுக்கும் அவரே இசையமைக்கிறார். முனீஷ் காந்த், காளி வெங்கட் உள்ளிட்டோர் உடன் நடிக்கும் இந்த திரைப்படத்தில் ஆதிக்கு ஜோடியாக ஆதிரா ராஜ் தோன்றுகிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in