உடற்கல்வி ஆசிரியராக ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிக்கும் புதிய படம்!

உடற்கல்வி ஆசிரியராக ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிக்கும் புதிய படம்!

ஹிப்ஹாப் தமிழா ஆதி நாயகனாக நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனாக மாறியவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. ’மீசையை முறுக்கு’ படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி ‘நட்பே துணை’, ‘நான் சிரித்தால்’, ‘சிவக்குமாரின் சபதம்’, ‘அன்பறிவு’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘வீரன்’ திரைப்படத்தில் நடத்து வரும் இவர் அடுத்ததாக ‘ஹெச்ஹெச்டி7’ எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் நடிக்கிறார்.

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்த படத்தினை கார்த்திக் வேணுகோபால் இயக்குகிறார். கனகவேல் எனும் பள்ளி உடற்பயிற்சி ஆசியராக ஹிப்ஹாப் தமிழா நடிக்கும் இப்படத்தில் ஜிகே பிரசன்னா எடிட்டராக பணிபுரிகிறார், மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்துக்கு ஹிப்ஹாப் தமிழாவே இசையமைக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in