'தெய்வத்தின் பெயரைப் படத்திற்குத் தலைப்பாக வைக்கக்கூடாது': நடிகர் பிரித்விராஜுக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு

'தெய்வத்தின் பெயரைப் படத்திற்குத் தலைப்பாக வைக்கக்கூடாது': நடிகர் பிரித்விராஜுக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு

நடிகர் பிரித்விராஜ் நடிக்க உள்ள படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்று கேரளாவில் இந்து அமைப்புகள் வலியுறுத்தியுள்னன.

மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் பிரித்விராஜ். இவர் தமிழில் 'கனா கண்டேன்', 'மொழி', 'பாரிஜாதம்', 'சத்தம் போடாதே',' கண்ணாமூச்சி ஏனடா', 'வெள்ளித்திரை', 'அபியும் நானும்', 'காவியத்தலைவன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் மலையாளத்தில் நடிக்க உள்ள படத்திற்கு ‘குருவாயூரம்பல நடையில்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை விபின் தாஸ் இயக்குகிறார்.

ஆனால், இப்படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று கேரளாவில் உள்ள விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. ''குருவாயூரப்பன் தெய்வத்தின் பெயரைப் படத்துக்கு வைத்து கதையைத் திரித்து சொல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அது நடக்காது. பெயரை மாற்ற வேண்டும்'' என்று இந்து அமைப்புகள் மிரட்டல் விடுத்துள்ளன.

இந்த நிலையில், இந்த மிரட்டலுக்கும் விஷ்வ இந்து பரிஷத்துக்கும் தொடர்பில்லை என்றும் இப்படத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் நபர், பல ஆண்டுகளுக்கு முன் இந்த அமைப்பில் இருந்து நீக்கப்பட்டவர் என்றும் அந்த அமைப்பின் தலைவர் வி.ஜி.தம்பி தெரிவித்துள்ளார். நடிகர் பிரித்விராஜுக்கு மிரட்டல் விடப்பட்டதற்கு மலையாள திரையுலகத்தினர் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in