ஆதிக்க மொழியாக இருக்கிறது இந்தி! - கொந்தளிக்கும் இயக்குநர் பா.ரஞ்சித்

ஆதிக்க மொழியாக இருக்கிறது இந்தி! -  கொந்தளிக்கும் இயக்குநர் பா.ரஞ்சித்

இந்தியாவில் இந்தி ஆதிக்க மொழியாக இருக்கிறது என்று இயக்குநர் பா.ரஞ்சித் குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரையில் வானம் கலைத் திருவிழா துவக்க விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற இயக்குநர் பா.ரஞ்சித் செய்தியாளர்களிடம் கூறுகையில்," இந்தியாவில் இந்தி ஆதிக்க மொழியாக இருக்கிறது. இந்தியாவை வடஇந்தியா, தென் இந்தியா என பிரித்துப் பார்க்கிறார்கள். தென்னிந்தியர்களை விட, உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் வட இந்தியர்களுக்கு உண்டு. இந்தியை எப்போதும் ஏற்க மாட்டோம். தமிழ்தான் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும்" என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில்," இளையராஜா கருத்துக்கு எதிர்வினை ஆற்றிய நபர்களின் மன நிலையைப் புரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் அதை எதிர்க்கிறோம். இந்தியாவில் திராவிடர்களுக்கான முக்கியத்துவம் என்பது மிகவும் முக்கியம். திராவிடர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நிற்க வேண்டும்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in