நடிகர் விஜய் சொகுசு கார் வழக்கில் உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!

நடிகர் விஜய்
நடிகர் விஜய்hindu கோப்பு படம்

நடிகர் விஜய் சொகுசு கார் வழக்கில் அபராதம் வசூலிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

2005ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து சொகுசு காரை இறக்குமதி செய்தார் நடிகர் விஜய். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரியாக ரூ.7.98 லட்சம் செலுத்த வேண்டும் என வணிகவரித்துறை தெரிவித்தது. ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் வரியை செலுத்தாத காரணத்தினால், விஜய்க்கு காரின் நுழைவு வரி மற்றும் அபராதத்தொகை இரண்டும் சேர்த்து செலுத்தவேண்டும் என வணிகவரித்துறை உத்தரவிட்டது.

ஆனால், நுழைவுவரி தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததால், வரி செலுத்த காலதாமானது என்றும் சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்துவதற்கு தாமதம் செய்ததற்காக 400% அளவிற்கு வணிக வரித்துறை அபராதம் விதித்ததற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நடிகர் விஜய் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், நடிகர் விஜய் சொகுசு கார் வழக்கில் அபராதம் வசூலிக்க இடைக்கால தடை விதித்ததோடு, விஜய் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடியும் வரை அபராதம் தொடர்பாக வணிக வரித்துறை எந்த கட்டாய நடவடிக்கையும் எடுக்ககூடாது என உத்தரவிட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in