நட்புக்கான இசை அஞ்சலி: ’ஹே சினாமிகா’ அடுத்த பாடல் வெளியீடு

துல்கர் சல்மான்
காஜல் அகர்வால்
துல்கர் சல்மான் காஜல் அகர்வால்

துல்கர் சல்மான் நடித்துள்ள ’ஹே சினாமிகா’ படத்தின் அடுத்தப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

நடன மாஸ்டர் பிருந்தா இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம், 'ஹே சினாமிகா'. துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் அதிதி ராவ் ஹைதரி, காஜல் அகர்வால், பாக்யராஜ், சுஹாசினி, குஷ்பு உட்பட பலர் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். பிரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. அடுத்து துல்கர் சல்மான், முதன்முறையாக தமிழில் பாடிய பாடல் ஒன்றும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இந்தப் படத்தின் அடுத்த பாடல் வெளியாகி இருக்கிறது.

துல்கர் சல்மான் மற்றும் காஜல் அகர்வால் ஆகியோரின் நட்பைக் கொண்டாடும் வகையிலான ‘தோழி’ என்ற அந்தப் பாடலை, மதன் கார்க்கி எழுதியுள்ளார். பிரதீப் குமார் பாடியுள்ள இந்தப் பாடல் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

பாடல் பற்றி இயக்குநர் பிருந்தா கூறும்போது, “ஹே சினாமிகா படத்தின் ‘அச்சமில்லை’ பாடல் உற்சாகமான நடனக் கலவை என்றால், ‘தோழி’ உணர்ச்சிகளை பிரதிபலிக்கும். கேட்பவர்களின் சொந்த உறவுகளை நினைவுபடுத்தும் வகையில் இது அமைந்துள்ளது. துல்கர் மற்றும் காஜல் அற்புதமான பங்களிப்பை வழங்கியுள்ளார்கள். நட்புக்கான இந்த இதயப்பூர்வமான இசை அஞ்சலியுடன் ரசிகர்கள் இணைவார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

இந்தப் படம், பிப்ரவரி 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in