நாயகிகளால் தாமதமாகும் பான் இந்தியா படம்!

ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா

ஹீரோயின்களால், பிரபல ஹீரோ நடிக்கும் பான் இந்தியா படம் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

லிங்குசாமி இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் படம், 'தி வாரியர்'. இதில் பிரபல தெலுங்கு ஹீரோ ராம் பொத்தினேனி ஹீரோவாக நடிக்கிறார். கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். ஆதி வில்லனாக நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிவடையும் நிலையில் இருக்கிறது.

ராம் பொத்தினேனி
ராம் பொத்தினேனி

இதையடுத்து ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தை போயபதி ஸ்ரீனு இயக்குகிறார். இது, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பான் இந்தியா படமாக உருவாகிறது. போயபதி ஸ்ரீனு கடைசியாக இயக்கிய 'அகாண்டா' படம் சூப்பர் ஹிட்டானதால், அடுத்தப் படத்தை உடனடியாக தொடங்க முடிவெடுத்தார்.

இதில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டார். இன்னொரு நாயகியாக நடிக்க முன்னணி இந்தி நடிகையைத் தேடி வந்தனர். யாருடைய கால்ஷீட்டும் கிடைக்கவில்லை. இதற்கி டையே ராஷ்மிகாவும் மேலும் சில படங்களில் ஒப்பந்தமாகி இருப்பதால், அவர் கால்ஷீட்டிலும் சிக்கல் இருக்கிறது. இதனால், இந்தப் படத்தை உடனடியாக தொடங்க முடியவில்லை என்று படக்குழு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in