'வெந்து தணிந்தது காடு’படத்தின் டப்பிங்கை முடித்த ஹீரோயின்!

'வெந்து தணிந்தது காடு’படத்தின் டப்பிங்கை முடித்த ஹீரோயின்!

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' என்ற படத்தின் டப்பிங்கை முடித்துவிட்டதாக, சித்தி இட்னானி தெரிவித்துள்ளார்.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம், 'வெந்து தணிந்தது காடு'. ஜெயமோகன் எழுதிய கதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். தனது வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் மூலம் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' படங்களுக்கு பின் கவுதம் வாசுதேவ் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் மூன்றாம் முறையாக இணையும் படம் இது. இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கதாநாயகியாக சித்தி இட்னானி நடிக்கிறார்.

இந்த படம் செப்டம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில், இந்தப் படத்தின் டப்பிங்கை நடிகர் சிம்பு நிறைவு செய்தார். இப்போது, சித்தி இட்னானி தன்னுடைய டப்பிங் பணி முடிந்துவிட்டதாகக் கூறியுள்ளார். இயக்குநர் கவுதம் மேனனுடன் இருக்கும் புகைப்படத்தைப் வெளியிட்டுள்ள அவர், " ’பாவை’யின் டப்பிங் முடிந்துவிட்டது. என்னை நம்பி டப்பிங் பேச அனுமதித்த கவுதம் மேனன் சாருக்கு நன்றி. கனவுகள் நனவாகிறது. நான் கவுதம் மேனன் சாரின் ஹீரோயின் என்பதை நம்ப முடியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in