`அதிகாலை 3 மணிக்கு ஹீரோ அழைத்தால் செல்ல வேண்டும்’: பாலிவுட்டின் மறுபக்கம் சொன்ன நடிகை!

`அதிகாலை 3 மணிக்கு ஹீரோ அழைத்தால் செல்ல வேண்டும்’: பாலிவுட்டின் மறுபக்கம் சொன்ன நடிகை!

பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள், சமரசம் செய்துகொள்ளும் நடிகைகளுக்கே வாய்ப்புகளை வழங்குவார்கள் என்று பிரபல நடிகை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத், தமிழில் கமல்ஹாசன் நடித்த ’தசாவதாரம்’படத்தில் நடித்திருந்தார். சிம்புவின் ஒஸ்தி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ள அவர், ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது 'ஆர்கே/ஆர்கே' படத்தில் நடித்துள்ளார். இவர், சமீபத்தில் அளித்த பேட்டி பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அவர் கூறியிருப்பதாவது: பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள், சமரசம் செய்துகொள்ளும் நடிகைகளையே விரும்புவார்கள். தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பவர்களுக்குத்தான் வாய்ப்புகளை வழங்குவார்கள். நான் அப்படியில்லை என்பதால் எனக்கு வாய்ப்புத் தருவதில்லை. யாருடைய விருப்பங்களுக்கும் என்னை உட்படுத்த தயாராக இல்லை.

அதிகாலை 3 மணிக்கு உங்களுடன் நடிக்கும் ஹீரோ, வீட்டுக்கு அழைத்தால் செல்ல வேண்டும். இல்லை என்றால் படத்தில் இருந்து நீக்கப்படுவீர்கள். பல படங்களில் நல்ல நடிப்பை வழங்கி இருந்தாலும் என்னுடைய கவர்ச்சியை பற்றி மட்டுமே பேசினார்கள். நடிப்பைப் பேசவில்லை. கமல்ஹாசனின் தசாவதாரம், பியார் கே சைட் எஃபெக்ட்ஸ், வெல்கம் ஆகிய படங்களில் சிறப்பாக நடித்திருந்தேன். ஆனால், யாரும் அதைக் கண்டு கொள்ளவில்லை.

இவ்வாறு மல்லிகா ஷெராவத் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in