உதயநிதி தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பால் கடும் போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள் கடும் அவதி

உதயநிதி தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பால் கடும் போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள் கடும் அவதி

பூந்தமல்லி அருகே சாலையில் நடந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிக்கும் திரைப்படத்திற்கான படப்பிடிப்பால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே உள்ள நேமம், குத்தம்பாக்கம் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு செல்லும் சாலையில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிக்கும் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இன்று காலை நடந்தது. அப்போது, அந்த பகுதியில் போக்குவரத்து தடைபட்டதோடு, பொதுமக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. மக்களை வேறு பாதையில் செல்ல அங்கிருந்த தனியார் நிறுவன ஊழியர்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தனர். இதற்கு காவல்துறையினரும் உடந்தையாக இருந்தனர்.

சாலையில் படப்பிடிப்பு நடந்ததால் பள்ளி வாகனங்கள், மருத்துவத்திற்குப் பயணிக்கும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனை வீடியோவாக நாம் தமிழர் கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளர் பசுபதி மற்றும் நிர்வாகிகள் வீடியோ எடுத்தனர். அப்போது, தனியார் ஊழியர்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ``இது எங்க ஊர். இந்த வழியாக போகக்கூடாது என்று சொல்வதற்கு நீங்கள் யார்? "என்று வீடியோ எடுக்கும் நபர் கேள்வி கேட்கும் நிலையில், சூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது என்று தனியார் ஊழியர்கள் சொன்னதும், அப்படியென்றால் சூட்டிங் முக்கியம், மக்கள் போகக்கூடாதா என்று கோபத்துடன் கேட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. சாலையில் நடந்த படப்பிடிப்பால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in