1000 சண்டைக் கலைஞர்கள்: 10 கோடியில் ஷங்கர் படத்துக்கு ஆக்‌ஷன் காட்சி

1000 சண்டைக் கலைஞர்கள்: 10 கோடியில் ஷங்கர் படத்துக்கு ஆக்‌ஷன் காட்சி

ஷங்கர் இயக்கும் படத்துக்கு 10 கோடி செலவில் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர், ராம் சரண் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு தற்காலிகமாக, RC15 என டைட்டில் வைத்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் கியாரா அத்வானி நாயகியாக நடிக்கிறார். அஞ்சலி, ஜெயராம், சுனில், ஸ்ரீகாந்த், நவீன் சந்திரா உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார்.

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கும் இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் புணே அருகே நடந்தது. அடுத்தக் கட்டப் படப்பிடிப்புகள், ராஜமுந்திரி, காக்கிநாடா, மேற்கு கோதாவரி, அமிர்தசரஸ், விசாகப்பட்டினத்தில் நடந்தது. இந்நிலையில் இந்தப் படத்துக்காக பிரம்மாண்ட ஆக்‌ஷன் காட்சியை ஷங்கர் இயக்க இருக்கிறார்.

இதுவரை இந்திய சினிமாவில் வராத அளவுக்கு புதிதாக இந்த சண்டைக்காட்சி இருக்கும் என்றும் இதில் சுமார் 1000 சண்டைக் கலைஞர்கள் பங்குபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு மட்டுமே 10 கோடி பட்ஜெட் என்கிறார்கள். ஏற்கெனவே ராம் சரண், கியாரா அத்வானி பங்குபெறும் பாடல் காட்சியில் 1,200 நடனக் கலைஞர்கள் பங்குபெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in