துணிவு, வாரிசு படங்களுக்கு தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுவிட்டதா?- திருப்பூர் சுப்பிரமணியன் விளக்கம்

துணிவு, வாரிசு படங்களுக்கு தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுவிட்டதா?- திருப்பூர் சுப்பிரமணியன் விளக்கம்

துணிவு, வாரிசு படங்களுக்கு தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுவிட்டதாக வெளியான செய்திக்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'துணிவு'. அஜித் நாயகனாக நடித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மஞ்சு வாரியர், சமுத்திரகனி, சிபி சந்திரன் உட்பட நடித்துள்ளனர். படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸும், ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனமும் கைப்பற்றியுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'வாரிசு' படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கியுள்ளார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார். மேலும் சரத்குமார், பிரகாஷ்ராஜ், குஷ்பு, யோகிபாபு உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ இந்த படத்தை தயாரித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12-ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் 470-க்கும் அதிகமான திரையரங்குகள் 'துணிவு' திரைப்படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய்யின் 'வாரிசு' திரைப்படத்தை காட்டிலும் 'துணிவு' திரைப்படத்திற்கு அதிகமான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியிருந்தது.

இதனை மறுத்துள்ள தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன், "பொங்கலுக்கு வெளியாகவுள்ள அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு உள்ளிட்ட படங்களுக்கு இதுவரை எந்த திரையரங்குகளும் ஒதுக்கவில்லை. தவறான தகவல்களை பகிரவேண்டாம்" என கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in