’தி லெஜண்ட்’ ஹீரோயினுக்கு இவ்வளவு கோடி சம்பளமா?

’தி லெஜண்ட்’ ஹீரோயினுக்கு இவ்வளவு கோடி சம்பளமா?

’தி லெஜண்ட்’ பட ஹீரோயின் வாங்கியதாகக் கூறப்படும் சம்பளத்தை அவர் தரப்பு மறுத்துள்ளது.

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் நடித்துள்ள படம், ’தி லெஜண்ட்’. இந்த படத்தின் மூலம் ஹீரோவாகவும், தயாரிப்பாளராகவும் அவர் அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தை ஜேடி - ஜெர்ரி இயக்கியுள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தி நடிகை ஊர்வசி ரவுதலா, இதில் ஹீரோயினாக நடித்துள்ளார். பிரபு, விஜயகுமார், நாசர், தம்பி ராமையா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் கடந்த 28ம் தேதி ரிலீஸ் ஆனது. இந்நிலையில் இந்தப் படத்தில் நடித்துள்ள ஊர்வசி ரவுதலா சம்பளமாக ரூ.20 கோடி பெற்றதாக செய்திகள் வெளியானது. அறிமுக நடிகைக்கு இவ்வளவு கோடி வழங்கப்பட்டதா? என்று கோலிவுட் ஆச்சரியப்பட்டது.

தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் நடிகை நயன்தாராவை, ஊர்வசி ரவுதலா முந்திவிட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், இதை ஊர்வசி தரப்பு மறுத்துள்ளது. ரூ.20 கோடி சம்பளம் வாங்கவில்லை என்றும் ஆனால், ஓர் அறிமுக நடிகைக்கும் கிடைக்கும் சம்பளத்தை விட அதிகமாகவே அவர் பெற்றார் என்றும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in