கமலுடனான படம் கைவிடப்பட்டதா?- இயக்குநர் விளக்கம்!

கமலுடனான படம் கைவிடப்பட்டதா?- இயக்குநர் விளக்கம்!

நடிகர் கமல்ஹாசனுடனான படம் கைவிடப்பட்டதா? என்று இயக்குநர் மகேஷ் நாராயணன் விளக்கம் கொடுத்துள்ளார்.

’விக்ரம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் படம் நடிக்க இருப்பதாகத் தெரிவித்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த வருடம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது கமல்ஹாசன் ‘இந்தியன்2’ படத்தில் பிஸியாக இருக்கிறார். இதனால், மகேஷ் நாராயணன் படம் கைவிடப்பட்டது எனத் தகவல்கள் வெளியாகியது.

இந்த செய்திகள் வெறும் வதந்திகள் என மறுத்து பேட்டி கொடுத்துள்ளார் இயக்குநர் மகேஷ் நாராயணன். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, ‘தற்போது படத்தின் திரைக்கதை பணிகள் போய்க்கொண்டிருக்கிறது. படம் கைவிடப்பட்டதாகத் செய்திகள் பார்த்தேன். படம் கைவிடப்படவில்லை. நடிகர் கமல்ஹாசனின் பிஸி ஷெட்யூல் காரணமாக சற்றுத் தள்ளிப் போய் இருக்கிறது. கமல்ஹாசன் திரைக்கதையை முடித்ததும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கி விடும்’ எனத் தெரிவித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் மகேஷ் நாராயணன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in