இந்தியில் பாட ரூ. 6 லட்சம் சம்பளம் கேட்கிறாரா சித் ஸ்ரீராம்?

பாடகர் சித் ஸ்ரீராம்
பாடகர் சித் ஸ்ரீராம்

இந்தியில் பாடுவதற்கு, பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் ரூ.6 லட்சம் சம்பளம் கேட்பதாகக் கூறப்படுகிறது.

பிரபல பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம். தமிழில், ‘தள்ளிப் போகாதே’, ‘கதைப்போமா’, ‘தாரமே தாரமே’, ‘என்னடி மாயாவி நீ’, ‘கண்ணான கண்ணே’, ‘உன்னை நினைச்சு’ உட்பட பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார். சமீபத்தில் வெளியான ’புஷ்பா’ படத்தில் ’ஸ்ரீவள்ளி’ பாடலைப் பாடியிருந்தார். இந்தப் பாடலும் சூப்பர் ஹிட்டானது.

தமிழ் தவிர, தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களிலும் பாடிவரும் சித் ஸ்ரீராம், ‘வானம் கொட்டட்டும்’ படம் மூலம் இசையமைப்பாளராகவும் ஆனார். ‘புஷ்பா’ படமும் பாடல்களும் இந்தியில் ஹிட் ஆனதால், அவருக்கு இந்தி சினிமாவில் பாடுவதற்கு வாய்ப்புகளும் வந்துள்ளன.

இந்நிலையில், அவர் இந்தியில் பாட, ஒரு பாடலுக்கு ரூ.6 லட்சம் சம்பளம் கேட்பதாகக் கூறப்படுகிறது. இருந்தாலும் அவர் குரலுக்காக அந்தச் சம்பளத்தைக் கொடுக்க பாலிவுட் இசையமைப்பாளர்கள் தயாராக இருப்பதாக இந்தி சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in