இந்தியில் 3 படங்களில் நடிக்கிறார் சமந்தா!

சமந்தா
சமந்தா

நடிகை சமந்தா, 3 இந்தி திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

காதல் திருமணம் செய்துகொண்ட நடிகை சமந்தா- நாக சைதன்யா கடந்த சில மாதங்களுக்கு விவாகரத்து செய்வதாக திடீரென்று அறிவித்தனர். இது இந்தியத் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமீபத்தில் இதுபற்றி பேட்டியளித்த நாக சைதன்யா, இருவரும் சேர்ந்து எடுத்த முடிவுதான் விவாகரத்து என்றும் சமந்தாவுக்கு சந்தோசம் என்றால் தனக்கும் சந்தோசம்தான் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், விவாகரத்துக்குப் பிறகு அதிகப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சமந்தா. ’அரேஞ்ச்மென்ட்ஸ் ஆப் லவ்’ என்ற ஹாலிவுட் படத்திலும் அவர் நடிக்க இருக்கிறார். இதில் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே ’பேமிலிமேன் 2’ வெப் சிரிஸுக்குப் பிறகு அவருக்கு இந்தி வாய்ப்புகளும் வந்துள்ளன. அவர் 3 இந்தி படங்களில் ஒப்பந்தமாகி உள்ளதாகக் கூறப்படுகிறது. பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்துடன் அவர் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், அவர் நடிக்கும் இந்திப் படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in