நடிகை ராஷ்மி கவுதம் ரகசியத் திருமணம்?

நடிகை ராஷ்மி கவுதம் ரகசியத் திருமணம்?

நடிகை ராஷ்மி கவுதம் ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழில், சாந்தனு, சந்தானம் நடித்த ’கண்டேன்’ படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் ராஷ்மி கவுதம். தெலுங்கு நடிகையான இவர், கன்னடம், இந்தி படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கில் டிவி நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். இப்போது சிரஞ்சீவி நடித்து வரும் ’போலா சங்கர்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடன ஆடவிருக்கிறார்.

இவரும் நடிகர் சுடிகள்ளி சுதீரும் காதலித்து வருவதாகச் சில வருடங்களுக்கு முன் செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், இதை இருவரும் மறுத்து வந்தனர். தாங்கள் நண்பர்கள்தான் என்று கூறி வந்தனர்.

இந்நிலையில், சினிமா துறைக்குத் தொடர்பில்லாத ஒருவரை, நடிகை ராஷ்மி கவுதம் சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், இதுபற்றி ராஷ்மி எதுவும் கருத்துத் தெரிவிக்கவில்லை.

சமூக வலைதளப் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் பதிவேற்றிவரும் ராஷ்மி கவுதம், இந்தத் தகவலை ஏன் மறைக்க வேண்டும் என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in