'லவ் டுடே' படம் இவ்வளவு வசூல் செய்துள்ளதா?: ஆச்சரியப்படுத்திய பிரதீப் ரங்கநாதன்

'லவ் டுடே' படம் இவ்வளவு வசூல் செய்துள்ளதா?: ஆச்சரியப்படுத்திய பிரதீப் ரங்கநாதன்

இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய 'லவ் டுடே' திரைப்படம் எதிர்பார்த்ததை விட அதிக வசூல் செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

'கோமாளி' படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் தற்போது இயக்கி நடித்துள்ள படம் ‘லவ் டுடே’ . இப்படத்தில் நாயகியாக இவானா நடித்துள்ளார். சத்யராஜ், யோகிபாபு, ராதிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தினை, கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரித்துள்ளார்.

கடந்த 4-ம் தேதி வெளியான இப்படம் கதை ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 58 கோடியை கடந்து வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் வெளியானவுடனே இயக்குநர் பிரதீப் ரங்கநாதனை அழைத்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in