ஷங்கர் படத்தின் ஒரு பாடலுக்கு ரூ.23 கோடி செலவா?

ராம் சரண், ஷங்கர், தில் ராஜூ
ராம் சரண், ஷங்கர், தில் ராஜூ

ஷங்கர் இயக்கும் படத்தின் ஒரு பாடலுக்கு மட்டும், ரூ.23 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் ஷங்கர் இப்போது, ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்தி நடிகை கியாரா அத்வானி நாயகியாக நடிக்கிறார். ஜெயராம், அஞ்சலி உட்பட பலர் நடிக்கின்றனர். பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் சார்பில் தில் ராஜூ தயாரிக்கிறார்.

இந்த நிறுவனம் தயாரிக்கும் 50-வது படம் இது. அதனால், பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. தமன் இசை அமைக்கிறார். திரு ஒளிப்பதிவு செய்கிறார்.

RC 15 என தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் பாடல் காட்சி, சில மாதங்களுக்கு முன் புனே அருகே பிரம்மாண்ட செட் அமைத்து படமாக்கப்பட்டது.

ஜானி மாஸ்டர் நடனம் அமைத்தார். இதில் வெளிநாட்டு நடன கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தப் பாடல் காட்சி ஏராளமான பொருட் செலவில் உருவாக்கப்பட்டதாக முதலில் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த ஒரு பாடலுக்கு மட்டும் ரூ.23 கோடி செலவழிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தெலுங்கில் உருவாகும் இந்தப் படம் தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in