ஹாரி பாட்டர் ரசிகர்கள் சோகம்... ஆல்பஸ் டம்பில்டோராக நடித்த மைக்கேல் காம்பன் உலகைவிட்டுப் பிரிந்தார்!

ஹாரிபாட்டர் படத்தில் மைக்கேல் காம்பன்
ஹாரிபாட்டர் படத்தில் மைக்கேல் காம்பன்
Updated on
1 min read

ஹாரி பாட்டர் படங்களில் ஆல்பஸ் டம்பில்டோராக நடித்த மைக்கேல் காம்பனின் மரணத்துக்கு பாட்டர் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடைசியாக வெளியான 6 ஹாரி பாட்டர் படங்களில் ஹாக்வார்ட்ஸ் தலைமையாசிரியர் ஆல்பஸ் டம்பில்டோராக நடித்தவர் மைக்கேல் காம்பன். இன்று(செப்.28) தனது 82வது வயதில், அமைதியாக உலகை விட்டுப் பிரிந்தார் மைக்கேல் காம்பன். இதனையொட்டி ஹாரி பாட்டர் ரசிகர்கள், பாட்டர் திரைப்படங்களில் இடம்பெற்ற மறக்க முடியாத வசனங்களை பதிவு செய்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஹாரி பாட்டர் திரைப்படங்களின் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மைக்கேல் காம்பனின் டம்பில்டோர் அவதாரத்திலான கறுப்பு வெள்ளை புகைப்படத்தை வெளியிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளது.

’மைக்கேல் காம்பன் காலமானதை அறிந்து ஆழ்ந்த வருத்தமடைந்தோம். தனது நகைச்சுவை, இரக்கம் மற்றும் கருணையால் உலகம் முழுவதிலும் ஹாரி பாட்டர் ரசிகர்களுக்கு அளவிட முடியாத மகிழ்ச்சியை அவர் சேர்த்திருக்கிறார். அவரது நினைவை என்றென்றும் நம் இதயங்களில் ஏந்துவோம்’ என பதிவிட்டுள்ளனர்.

மைக்கேலுக்கு முன் ஹாக்வார்ட்ஸ் தலைமையாசிரியராக, முதல் இரண்டு ஹாரி பாட்டர் படங்களில் நடித்த ரிச்சர்ட் ஹாரிஸ் 2002-ல் இறந்தார். தற்போது ஹாக்வார்ட்ஸ் தலைமையாசிரியராக தோன்றி பாட்டர் ரசிகர்களை அரவணைத்திருந்த மைக்கேல் காம்பனும் உலகை விட்டுப் பிரிந்திருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in