சசி இயக்கும் ‘நூறுகோடி வானவில்’

நூறு கோடி வானவில்
நூறு கோடி வானவில்

சசி இயக்கும் அடுத்தப் படத்துக்கு ‘நூறு கோடி வானவில்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

’சொல்லாமலே’, ‘பூ’, ‘பிச்சைக்காரன்’, ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ உள்ளிட்ட சில படங்களை இயக்கிய சசி, இப்போது ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இதில், கோவை சரளா, தம்பி ராமையா, சின்னி ஜெயந்த், ’பிச்சைக்காரன்’ மூர்த்தி உட்பட பலர் நடிக்கின்றனர். சித்தி இட்னானி நாயகியாக நடிக்கிறார். இவர் சிம்புவின் ’வெந்து தணிந்தது காடு’ படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

பாலாஜி காப்பா, அருண் அருணாச்சலம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சித்து குமார் இசையமைக்கிறார். பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. இதை விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் மற்றும் சித்தார்த் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். படத்துக்கு ’நூறு கோடி வானவில்’ என்று டைட்டில் வைத்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in