பின்புறம் ரஜினி; கருப்பு சட்டை, வேட்டியுடன் அசத்தும் ஆர்யா: வெளியானது 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' பர்ஸ்ட் லுக்

பின்புறம் ரஜினி; கருப்பு சட்டை, வேட்டியுடன் அசத்தும் ஆர்யா: வெளியானது 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' பர்ஸ்ட் லுக்

நடிகர் ஆர்யா நடிக்கும் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகியுள்ளது.

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'. இந்த படத்தில் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சித்தி இத்னானி கதாநாயகியாக நடிக்கிறார். ராமநாதபுரம் பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இந்த படத்தின் போஸ்டரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டரில் நடிகர் ஆர்யா கருப்பு சட்டை, கருப்பு வேட்டி அணிந்து வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார். பாட்ஷா படத்தில் நடிகர் ரஜினிகாந்த் படம் பின்புறத்தில் இருக்கிறது. இந்த போஸ்டர் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in