டாம் குரூஸ் 60-வது பிறந்த நாள்: வாழ்த்துகளால் நிரம்பும் சமூக வலைதளங்கள்!

டாம் குரூஸ் 60-வது பிறந்த நாள்: வாழ்த்துகளால் நிரம்பும் சமூக வலைதளங்கள்!

நடிகர் டாம் குரூஸின் 60-வது பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளங்கள், அவருக்கான வாழ்த்துகளால் நிரம்பி வழிகிறது.

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ். 1981-ம் ஆண்டு வெளியான ’எண்ட்லெஸ் லவ்’ என்ற படத்தில் சிறிய வேடத்தில் அறிமுகமான இவர், 1983 ஆம் ஆண்டு வெளியான ’ரிஸ்கி பிசினஸ்’ மூலம் ஹீரோவாக உயர்ந்தார். இந்தப் படம் அவரை அடுத்தக் கட்டத்துக்கு அழைத்துச் செல்ல,1986-ல் வெளியான 'டாப் கன்' படம் அவர் புகழை இன்னும் பரப்பியது.

பிறகு வெளியான 'மிஷன்: இம்பாசிபிள்' தொடர் வரிசைப் படங்களின் உளவாளி கேரக்டருக்கு அவர் வந்தபிறகு, உலகம் முழுவதும் ரசிகர்களின் மனங்களில் ஆழமாக இடம் பிடித்துவிட்டார் டாம் குரூஸ். அவருடைய ரிஸ்கான ஆக்‌ஷன் அவதாரங்களை படங்களில் காண ஆச்சரியத்தோடு காத்திருக்கத் தொடங்கினார்கள் ரசிகர்கள். இன்று வரை அது அப்படியே தொடர்கிறது.

டாம் குரூஸின் 'டாப் கன்: மூவிரிக்' சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், அடுத்த வருடம் வெளியாக இருக்கும் ’மிஷன் இம்பாசிபிள் - டெட் ரெக்கோனிங் பார்ட் ஒன்’ படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இதற்கிடையே அவரது பிறந்த நாளான இன்று (ஜூலை 3), சமூக வலைதளங்கள் அவருக்கான வாழ்த்துகளால் குவிந்து வருகிறது.

’இத்தனை வருடங்களாக எங்களை மகிழ்த்து வரும் ஆக்‌ஷன் ஸ்டார் டாம் குருஸுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்’ என்றும் டாம் குரூஸ் ஒரு ஆக்‌ஷன் லெஜண்ட் என்று ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

’’டாம் குரூஸின் அர்ப்பணிப்புக்கு யாரும் பொருந்தமாட்டார்கள். அவருக்கு நிகர் அவர்தான். 60 வயதுக்கு வாழ்த்துகள்’ என்று தெரிவித்துள்ள ரசிகர் ஒருவர், அவர் ரிஸ்க் எடுத்து நடித்த சில ஸ்டன்ட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in