ரஜினிகாந்த்துக்கு ஈபிஎஸ், அண்ணாமலை, கமல், அன்புமணி பிறந்தநாள் வாழ்த்து!

ரஜினிகாந்த்துக்கு ஈபிஎஸ், அண்ணாமலை, கமல், அன்புமணி பிறந்தநாள் வாழ்த்து!

தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, அன்புமணி, கமல்ஹாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

``அன்பு சகோதரர் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். ரஜினிகாந்த் அவர்கள் நீண்ட ஆயுளோடும் நல் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

"இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ பிரார்த்திக்கிறேன்" என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

"அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் வெற்றிப் பயணம் தொடர இச்சிறந்த நாளில் வாழ்த்துகிறேன்" என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்தியுள்ளார்.

"இன்று 73-வது பிறந்தநாள் காணும் புகழ்பெற்ற நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்" என்று பாமக தலைவர் அன்புமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in