சிம்பு படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிம்பு படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிம்பு, ஹன்சிகா நடித்துள்ள ’மஹா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹன்சிகா மோத்வானி நடித்துள்ள படம், ’மஹா’. இதில் சிம்பு, கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் யு.ஆர்.ஜமீல் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ஸ்ரீகாந்த், கருணாகரன், சனம் ஷெட்டி, தம்பி ராமையா உட்பட பலர் நடித்துள்ளனர். இது ஹன்சிகாவின் 50-வது படம்.

மாலிக் ஸ்ட்ரீம்ஸ் மற்றும் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து படத்தை தயாரித்துள்ளன. ஜிப்ரான் இசையமைக்க, லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் உருவாகி 2 வருடமான நிலையில், ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சில பிரச்சினைகளால் ரிலீஸ் ஆகவில்லை. பின்னர் வரும் 27-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.

வரும் ஜூன் 10-ம் தேதி தியேட்டரில் இந்தப் படம் வெளியாகும் என்று, படத்தை வெளியிடும் ஸ்டூடியோ 9 சுரேஷ், தெரிவித்துள்ளார். இரண்டு வருடத்துக்குப் பிறகு சிம்பு நடித்துள்ள மஹா படம் ரிலீஸ் ஆவதால், அவர் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Related Stories

No stories found.