சயின்ஸ் பிக்சன் படத்தில் விஞ்ஞானியாக நடிக்கும் ஹன்சிகா!

சயின்ஸ் பிக்சன் படத்தில் விஞ்ஞானியாக நடிக்கும் ஹன்சிகா!

சயின்ஸ் பிக்சன் ஹாரர் காமெடி படத்தில் விஞ்ஞானியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார்.

ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை, சேட்டை, இவன் தந்திரன் உட்பட சில படங்களை இயக்கியவர், ஆர்.கண்ணன். இவர், இப்போது போகஸ் பிலிம்ஸ் நிறுவனத்துடன் தனது மசாலா பிக்ஸ் நிறுவனம் சார்பில் புதிய படம் ஒன்றைத் தயாரித்து இயக்குகிறார். இதில் ஹன்சிகா மோத்வானி நாயகியாக நடிக்கிறார்.

பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். சித்தார்த் சுபாவெங்கட் வசனம் எழுதுகிறார். கபிலன் வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கியது.

இயக்குநர் ஆர்.கண்ணன், ஹன்சிகா
இயக்குநர் ஆர்.கண்ணன், ஹன்சிகா

’தமிழ் சினிமாவுக்கு புதியதாகவும், ரசிகர்களுக்கு புது அனுபவமாகவும் இப்படம் இருக்கும். ஹன்சிகா மோத்வானி நேத்ரா எனும் அறிவியல் விஞ்ஞானியாக வருகிறார். இந்தப்படத்திற்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரமாண்டமான சயின்ஸ் லேப் ஒன்றை அமைக்க இருக்கிறோம்’ என்றது படக்குழு.

இயக்குநர் கண்ணன், தற்போது, மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ’கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தை தமிழில் ரீமேக் செய்துள்ளார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இதை அடுத்து, மிர்ச்சி சிவா, யோகிபாபு, கருணாகரன், பிரியா ஆனந்த் நடிக்கும் காசேதான் கடவுளடா படத்தை இயக்கியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in