ஹன்சிகா நடிக்கும் வெப் தொடர் தலைப்பு வெளியீடு

ஹன்சிகா நடிக்கும் வெப் தொடர் தலைப்பு வெளியீடு

ராஜேஷ்.எம் இயக்கத்தில் ஹன்சிகா நடிக்கும் வெப் தொடரின் டைட்டில், பிக்பாஸ் ஹவுஸில் வெளியிடப்பட்டுள்ளது.

பிரபல இயக்குநர்கள் அனைவரும் வெப் தொடர் பக்கம் தங்கள் கவனத்தைத் திரும்பியுள்ளனர். இயக்குநர் ராஜேஷூம் வெப் தொடர் பக்கம் திரும்பி இருக்கிறார். இவர் இயக்கும் தொடரில், ஹன்சிகா மோத்வானி நாயகியாக நடிக்கிறார். சாந்தனு, பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகேன் ராவ், ஆஷ்னா ஜவேரி, ஜனனி ஐயர் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கணேசன் இசையமைக்கிறார். ஆஷிஷ் ஜோசப் படத்தொகுப்பு செய்கிறார்.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருக்காக உருவாகும் இந்த தொடரை, ட்ரெண்ட்லவுட் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இந்த தொடருக்கு மை3 (MY3) என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இதுகுறித்து நடிகை ஹன்சிகா மோத்வானி கூறும்போது, ``இந்த தொடரில் பங்கேற்பது பெருமையாக இருக்கிறது. ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்திற்கு பின் இயக்குநர் ராஜேஷூடன் மீண்டும் இணைகிறேன். இந்த தொடர் 100 சதவீதம் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். அதே நேரம், இனிமையான அனுபவத்தையும் தரும். தனித்துவமான ரொமான்டிக் காமெடி பயணத்திற்கு தயாராகுங்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ராஜேஷ் எம். கூறும்போது, ``வெப் தொடர் இயக்குவது புதிய அனுபவம். ஒரு திரைப்படம் சென்றடைவதைவிட, அதிக வேகத்தில் இணைய தொடர் மக்களை சென்றடைகிறது. எனது ‘MY3'என்ற ரொமான்ஸ், காமெடி தொடர் இன்றைய இளைஞர்களின் வாழ்வை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும்'' என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in