`நான் பூஸ்டர் தடுப்பூசி போட்டுவிட்டேன்'- ஹன்சிகாவின் கரோனா அலர்ட்

`நான் பூஸ்டர் தடுப்பூசி போட்டுவிட்டேன்'- ஹன்சிகாவின் கரோனா அலர்ட்

நடிகை ஹன்சிகா மோத்வானி, பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கடந்த சில மாதங்களாக கரோனா பரவல் குறைந்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்கள் கரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளன. முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை எனவும் சில மாநிலங்கள் அறிவித்துள்ளன. இந்நிலையில் சில மாநிலங்களில் கரோனா அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, நியூசிலாந்து, ஹாங்காங், தைவான் உள்ளிட்ட நாடுகளில் கரோனா மீண்டும் அதிகரித்து வருகிறது.

இதனால் இரண்டு தடுப்பூசிப் போட்டுக்கொண்டவர்கள், மூன்றாவது தவணையாக பூஸ்டர் தடுப்பூசி போட ஆரம்பித்துள்ளனர். இந்தியாவிலும் பூஸ்டர் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிரபல நடிகை ஹன்சிகா மோத் வானி, தான் பூஸ்டர் தடுப்பூசிப் போட்டுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார். இதுபற்றி இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனது புகைப்படத்தைப் பதிவிட்டு இதைத் தெரிவித்துள்ளார்.

நடிகை ஹன்சிகா, ராஜேஷ் எம். இயக்கியுள்ள மை 3 வெப் தொடர் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்தார். இதையடுத்து பார்ட்னர், ரவுடிபேபி, விஜய் சந்தர் தயாரிக்கும் படம், ஆர்.கண்ணன் இயக்கும் படம் என பிசியாக இருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in