தாமதமாகும் ஹன்சிகாவின் 50-வது படம்: என்ன காரணம்?

தாமதமாகும் ஹன்சிகாவின் 50-வது படம்: என்ன காரணம்?

"மஹா படத்தின் கதை பிரமாதம், படம் நல்லா வந்திருக்கு. விரைவில் எல்லாம் சீராகும்" என்று நடிக ஹன்சிகா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இயக்குநர் யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் உருவாகும் படம் மஹா. இந்த படத்தில் ஹன்ஷிகா மோத்வானி நடித்து வருகிறார். இவருக்கு இது 50-வது படமாகும். இந்த படத்தில் சிம்பு முக்கியமான சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். நடிகர் ஶ்ரீகாந்த்தும் இப்படத்தில் நடித்துள்ளார். எட்செடெரா என்டர்டெயின்மென்ட் (Etcetera Entertainment) நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

நீண்ட காலமாகவே இந்த படம் உருவாகி வருகிறது. இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. உங்களின் 50-வது படம் தாமதம் ஆகிக் கொண்டிருக்கிறது என்பது உங்களது கஷ்டமாக இருக்கிறதா? என்று ஹன்சிகாவிடம் கேட்கப்பட்டபோது, "வருத்தமாக இருக்கிறது என்று சொல்லமாட்டேன். ஆனால், அதற்கு இவ்வளவு காலம் எடுத்துக்கிட்டிருக்கிறது ஏமாற்றம் என்று சொல்லலாம்.

இது எனது 50-வது படம் என்பதால் நம்பிக்கையுடன் இருக்கிறேன். இன்று என்னுடைய 55-வது படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன். ஆனால் பரவாயில்லை. ஒவ்வொரு படத்திற்கும் விதி என்று ஒன்று இருக்கிறது. அது மாதிரி மஹா படத்திற்கும் அதன் விதி இருக்கிறது. ஆனால் அதன் ரிலீஸை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். கதை பிரமாதம், படம் நல்லா வந்திருக்கு. விரைவில் எல்லாம் சீராகும். இந்த லேட் உள்பட எல்லாமே படத்திற்கு சாதகமாக அமையும் என்றும் நம்புகிறேன்" என்று கூறினார்.

Related Stories

No stories found.