நடிகை நயன்தாரா வழியில் ஹன்சிகா: பிரபல ஓடிடி தளத்திற்கு திருமண ஒளிபரப்பு உரிமை

நடிகை நயன்தாரா வழியில் ஹன்சிகா: பிரபல ஓடிடி தளத்திற்கு திருமண ஒளிபரப்பு உரிமை

நடிகை ஹன்சிகா தனது திருமண ஒளிபரப்பு உரிமையைப் பிரபல தனியார் ஓடிடி தளத்தில் வெளியிட ஒப்பந்தம் செய்து இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்திப் படம் ஒன்றில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தெலுங்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஹன்சிகா. இவர் தமிழில் தனுஷ், உதயநிதி ஸ்டாலின், ஜெயம் ரவி, விஜய், சிம்பு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சோஹேல் கதுரியாவை திருமணம் செய்ய உள்ளார்.

இவர்களது திருமணம் டிசம்பர் 4-ம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் நடைபெற உள்ளதாகச் சமீபத்தில் செய்திகள் வெளியானது. இந்நிலையில், தனது வருங்கால கணவருடன் பாரிஸில் உள்ள உலக அதிசயமான ஈபிள் கோபுரத்தின் முன்பு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஹன்சிகா சமீபத்தில் வெளியிட்டிருந்தார். தனது தோழி ரங்கி என்பவரின் கணவரான சோஹேல் கதுரியாவைத் தான் ஹன்சிகா திருமணம் செய்து கொள்ள உள்ளார். ரிங்கிக்கும், சோஹேல் கதுரியாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஏற்கெனவே பிரிந்து விட்டனர்.

நடிகை நயன்தாரா- இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதியினரைப் போன்று அவர்களின் திருமணத்தையும் ஓடிடியில் ஒளிபரப்பும் உரிமை தொடர்பாகப் பிரபல ஓடிடி நிறுவனம் சார்பாக ஹன்சிகா, சோஹோல் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்நிலையில் ஓடிடியில் ஒளிபரப்பும் உரிமையை அந்த நிறுவனத்திற்கு ஹன்சிகா, சோஹேல் ஜோடி  கொடுக்க சம்மதம் தெரிவித்து, ஒப்பந்தம் நிறைவு பெற்றுவிட்டதாகத் தகவல்கள் வெளியாகின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in