திருமணமான ஒரு மாதத்திற்குள் நடிகை ஹன்சிகா குடும்பத்திற்கு வந்த சோதனை

திருமணமான  ஒரு மாதத்திற்குள் நடிகை ஹன்சிகா குடும்பத்திற்கு வந்த சோதனை

நடிகை ஹன்சிகாவிற்கு திருமணமாகி ஒரு மாதம் கூட முடிவடையாத நிலையில் அவர் குடும்பத்தில் விவாகரத்து பிரச்சினை வெடித்துள்ளது.

பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்திப் படம் ஒன்றில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தெலுங்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஹன்சிகா. இவர் தமிழில் தனுஷ், உதயநிதி ஸ்டாலின், ஜெயம் ரவி, விஜய், சிம்பு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சோஹேல் கதுரியாவை டிசம்பர் 4-ம் தேதி ஜெய்ப்பூர் அரண்மனையில் திருமணம் செய்து கொண்டார். ஹன்சிகாவின் தோழி ரங்கி என்பவரின் முன்னாள் கணவர்தான் சோஹேல் கதுரியா. ரிங்கிக்கும், சோஹேல் கதுரியாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஏற்கெனவே பிரிந்தவர்கள்.

இந்நிலையில் ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோத்வானி தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்ட நாட்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் பிரசாந்த் மோத்வானி, தன்னுடைய மனைவிக்கு தற்போது விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளாராம். ஹன்சிகாவிற்கு திருமணமாகி 10 நாட்கள் கூட ஆகாத நிலையில் இப்படி ஒரு கசப்பை அந்த குடும்பம் சந்திக்க வேண்டியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in