நடிகை ஹன்சிகாவின் ஆக்‌ஷன் அவதாரம்

நடிகை ஹன்சிகாவின் ஆக்‌ஷன் அவதாரம்

இயக்குநர் விஜய் சந்தர் தயாரிக்கும் படத்தில் நடிகை ஹன்சிகா ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்துள்ளார்.

சிம்பு நடித்த வாலு, விக்ரம் நடித்த ஸ்கெட்ச், விஜய் சேதுபதி நடித்த சங்கத்தமிழன் படங்களை இயக்கியவர் விஜய் சந்தர். இவர் இப்போது தயாரிப்பாளர் ஆகி இருக்கிறார். ஃபிலிம் வொர்க்ஸ் நிறுவனம் சார்பில் இவர் தயாரிக்கும் படத்தில், ஹன்சிகா ஹீரோயினாக நடிக்கிறார். சந்தோஷ் பிரதாப், ஸ்ரீமன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

’கூகுள் குட்டப்பன்’ படத்தை இயக்கியுள்ள சபரி கிரீசன், சரவணன் இயக்குகிறார்கள். சக்தி ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு கேமராவை இயக்க, விஜய் சேதுபதி கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இரவு நேரத்தில் நடந்து வருகிறது. படத்தில் நடிகை ஹன்சிகா, ஆக்‌ஷன் காட்சிகளிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த ஆக்‌ஷன் காட்சிகளை சென்னை சென்ட்ரல் அருகே படமாக்கினர். இதில் அவருடைய ஆக்‌ஷன் காட்சிகள் மிரட்டலாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

நடிகை ஹன்சிகா, என் பெயர் ஸ்ருதி, ரவுடிபேபி, ஆர்.கண்ணன் இயக்கும் பெயரிடப்படாத படங்களில் நடித்துவருகிறார்.

Related Stories

No stories found.