எனது புற்றுநோய் போராட்டம் இன்னும் முடியவில்லை - நடிகை உருக்கம்!

எனது புற்றுநோய் போராட்டம் இன்னும் முடியவில்லை - நடிகை உருக்கம்!
ஹம்சா நந்தினி

புற்றுநோயுடனான என் போராட்டம் இன்னும் ஓயவில்லை என்று பிரபல நடிகை மருத்துவமனையில் இருந்து தெரிவித்துள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகை ஹம்சா நந்தினி. தமிழில், நான் ஈ, ருத்ரமாதேவி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டது. அதை தனது சமூக வலைதளபக்கத்தில் அறிவித்திருந்த அவர், அதற்காகச் சிகிச்சை பெற்று வந்தார். “இந்த நோயை போராடி வென்று மீண்டும் நடிக்க வருவேன்” என்றும் அப்போது அவர் கூறியிருந்தார்.

ஹம்சா நந்தினி
ஹம்சா நந்தினி

இந்நிலையில், புற்று நோய்க்காக இதுவரை 16 முறை கீமோ தெரபி சிகிச்சை எடுத்துக் கொண்டதாகக் கூறியுள்ளார் ஹம்சா நந்தினி. மருத்துவமனையில் தான் இருக்கும் புகைப்படங்களை தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள ஹம்சா நந்தினி, “புற்று நோய்க்கான கீமோ சிகிச்சையை 16 முறை முடித்துள்ளேன். இருந்தும் இன்னும் இதிலிருந்து முழுமையாக நான் வெற்றிபெறவில்லை. அடுத்த போராட்டத்துக்குத் தயாராகும் நேரம் இது. அறுவைச் சிகிச்சை செய்துகொள்ள இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, ‘இந்த நோயிலிருந்து நீங்கள் நிச்சயமாக விடுபடுவீர்கள். உங்களுக்காக நாங்களும் பிரார்த்திக்கிறோம்’ என்று ரசிகர்கள் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.