நடிகர் திலீப் போன் தகவல்கள் அழிப்பு: ஹேக்கர் கைது

நடிகர் திலீப் போன் தகவல்கள் அழிப்பு: ஹேக்கர் கைது
நடிகர் திலீப், சாய் சங்கர்

நடிகர் திலீப் போனில் இருந்த சாட்களை அழிக்க உதவிய சைபர் நிபுணரை கேரள போலீஸார் கைது செய்துள்ளனர்.

பிரபல மலையாள நடிகை ஒருவர் கடந்த 2017-ம் ஆண்டு கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு, நடந்து வருகிறது. நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபோது செல்போனில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் நடிகர் திலீப்பிடம் இருப்பதாகவும், அதை அவர் பார்த்தது தனக்குத் தெரியும் என்று இயக்குநர் பாலச்சந்திரகுமார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் விசாரணை அதிகாரியான டிஎஸ்பி பைஜு பவுலோசை கொல்ல நடிகர் திலீப், அவரது தம்பி அனூப், உறவினர் சூரஜ் சதி திட்டம் தீட்டியதாகவும் பாலச்சந்திரகுமார் தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர்கள் மீது போலீஸார் ஜாமீனில் வர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்தனர்.

இந்த வழக்கில் நடிகர் திலீப்பிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்த போன்களும் கைப்பற்றப்பட்டு தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டன. அதில், அவர் போனில் இருந்து 12 பேர்களுடன் நடத்தப்பட்ட `சாட்கள் அழிக்கப்பட்டிருப்பது சோதனையில் தெரியவந்தன.

அதை அழிப்பதற்கு கேரளாவைச் சேர்ந்த சைபர் நிபுணர், ஹேக்கர் சாய் சங்கர் என்பவர் உதவியுள்ளார். போனில் உள்ள அனைத்து சாட்களையும் மீட்க முடியாதபடி அழித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.