`துணிவு’ படத்திற்கு பிறகு தனுஷுடன் இணையும் ஹெச்.வினோத்!

`துணிவு’ படத்திற்கு பிறகு தனுஷுடன் இணையும் ஹெச்.வினோத்!

‘துணிவு’ படத்திற்குப் பிறகு இயக்குநர் ஹெச்.வினோத் தனுஷூடன் இணைய இருக்கிறார்.

ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர்கள் அஜித், மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்திருக்கக்கூடிய ‘துணிவு’ திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக இருக்கிறது. இதனை ஒட்டி இயக்குநர் ஹெச்.வினோத் ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில் படம் குறித்தும் அடுத்து தான் இயக்க இருக்கும் படம் குறித்தும் பகிர்ந்துள்ளார். அதில் அவர் ‘துணிவு’ படத்திற்கு பிறகு நடிகர் தனுஷூடன் இணைய இருப்பதை உறுதி செய்திருக்கிறார்.

இந்தக் கதைதான், அஜித்தை வைத்து முதலில் தான் இயக்க இருந்த கதை எனவும் ஆனால், அதற்கு பிறகு ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ ஆகிய படங்களை இயக்க நேரிட்டது எனவும் தெரிவித்துள்ளார் ஹெச். வினோத். ‘சதுரங்க வேட்டை’ கதையை மிஞ்சும் அளவுக்கு ஒரு கான்மேன் கதையாக இது இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸின் லலித் குமார் தயாரிக்க இருக்கிறார். நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் உருவாகி இருக்கக்கூடிய ‘வாத்தி’ திரைப்படம் அடுத்த மாதம் 17-ம் தேதி வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in