ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்திற்கு போடப்பட்ட பூஜை: கதைக்களத்தை வெளியிட்ட படக்குழு!

ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்திற்கு போடப்பட்ட பூஜை: கதைக்களத்தை வெளியிட்ட படக்குழு!

ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை இன்று தொடங்கியது.

இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ்  2015-ம் ஆண்டு 'டார்லிங்' என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் டிஷ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் கவிதாலயாவுடன் இணைந்து தயாரிக்கும் முதல் தமிழ்ப் படத்தில் இவர் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். 2023-ம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் நாளை என்ற திரைப்படத்தை இயக்கிய உதய் மகேஷ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குநராக வருகிறார். இந்தப்படத்தில் ஜி.வி பிரகாஷுடன் டேனியல் அன்னேபோப், ஹசீம் அப்துல் உள்ளிட்டவர்கள் நடிக்க உள்ளார்கள். கதாநாயகனுக்கும், சகோதரியின் மகளுக்கும் இடையேயான உறவைப் பற்றிய கதைக்களத்தைக் கொண்டதாக இந்த திரைப்படம் இருக்கும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in