வித்தியாசமான தோற்றத்தில் சந்தானம்: 'குலு குலு' பர்ஸ்ட் லுக் வெளியீடு!

வித்தியாசமான தோற்றத்தில் சந்தானம்:  'குலு குலு' பர்ஸ்ட் லுக் வெளியீடு!

நடிகர் சந்தானம் தேசாந்திரியாய் நடிக்கும் 'குலு குலு' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடித்துள்ள படம் 'குலு குலு'. அதுல்யா சந்திரா நாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்தில் நமிதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, 'லொள்ளு சபா' மாறன், சேசு ஆகியோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் நிறைவு பெற்றது.

இந்த நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஊர், ஊராகச் சுற்றும் தேசாந்திரியாய் சந்தானம் நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வரும் நிலையில், ஜூன் மாதம் படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in