`அஜித் படத்தில் நடிக்கப் போகிறேன்; பேச்சுவார்த்தை நடக்கிறது'- ரசிகர்களுக்கு ஜி.பி.முத்து இனிப்பான செய்தி

`அஜித் படத்தில் நடிக்கப் போகிறேன்; பேச்சுவார்த்தை நடக்கிறது'- ரசிகர்களுக்கு ஜி.பி.முத்து இனிப்பான செய்தி

அஜித் படத்தில் நடிக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து தெரிவித்துள்ளார்.

டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அதன் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ஜி.பி.முத்து சன்னி லியோனுக்கு பால்கோவா ஊட்டிய சம்பவம் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்நிலையில், கோவையில் தனியார் நிறுவனம் ஒன்றின் திறப்பு விழாவில் ஜி.பி.முத்து கலந்து கொண்டார். ஜி.பி.முத்து வருவதாகத் தகவல் பரவியதையடுத்து அவரின் ரசிகர்கள் அங்குக் குவிந்தனர். அப்போது அவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜி.பி.முத்து, “இப்போது எனக்கு சினிமா வாய்ப்புகள் அதிகம் வரத் தொடங்கி இருக்கிறது. சன்னி லியோனுடன் சேர்ந்து முதல் படத்தை நடித்துள்ளேன். அஜித்துடன் நடிக்கக் கண்டிப்பாக வாய்ப்பு வரும். தற்போது அதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், அவருடன் சேர்ந்து போட்டோ எடுத்தாலே போதும். சன்னி லியோன் படத்தில் நடிக்கும் போது அவர் யார் என்றே எனக்குத் தெரியாது. அவரின் போட்டோவை எனக்குக் காட்டினார்கள். சன்னி லியோன் பெரிய நடிகை என்று சொன்னார்கள். ஆனால் இசை வெளியீட்டு விழாவில் அவர் என் மீது பாசமாக நடந்து கொண்டார்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in