சன்னி லியோனுக்கு பால்கோவா ஊட்டி, டான்ஸ்: ரசிகர்களை உற்சாகப்படுத்திய ஜி.பி.முத்து

சன்னி லியோனுக்கு பால்கோவா ஊட்டி, டான்ஸ்: ரசிகர்களை உற்சாகப்படுத்திய ஜி.பி.முத்து

சென்னையில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் சன்னி லியோனுக்கு பால்கோவா ஊட்டி அவருடன் சேர்ந்து உற்சாகமாக நடனம் ஆடினார் ஜி.பி.முத்து.

சன்னி லியோன், சதீஷ், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஓ மை கோஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் பேசும்போது, இங்கு நிறையப் பேர் இருக்கிறார்கள். உங்களுக்குப் பிடித்தவர்களின் பெயரைச் சொல்லுங்கள் என ஒவ்வொருவரின் பெயராகச் சொல்லிவந்தார். ஜி.பி.முத்துவின் பெயரைச் சொன்னதுமே ஜி.பி. முத்து எழுந்து நின்றார். அப்போது சன்னி லியோன் ‘ஹி சோ க்யூட்’ என ஜி.பி. முத்துவை வர்ணித்தார். இதைக் கேட்டதும் கோல்கேட் புன்னகையோடு பளிச்சென குஷியானார் ஜி.பி.முத்து. ஆங்கிலம் தெரியாததால் ஜி.பி. முத்து தொகுப்பாளர் அர்ச்சனாவை மொழிபெயர்க்குமாறு சொல்லிவிட்டு மேடையேறினார். சன்னிலியோனைப் பார்த்து, ”உங்களைப் பார்த்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்க போட்டோவை பார்த்து நான் ஸ்வீட் கொடுத்தேன். தமிழ்நாட்டுல பால்கோவாங்கறது ரொம்ப பெரிய விஷயம். அதை உங்களுக்குத்தான் கொடுத்திருக்கேன். பால்கோவா மாதிரி ரொம்ப அழகா இருக்கீங்க” என்றதும் ஆடியனஸ் தரப்பிலிருந்து அப்ளாஸ் அள்ளியது.

உடனே ஆடியன்ஸ் பக்கம் திரும்பிய ஜி.பி. முத்து, “எல்லாம் உங்களுக்காகத்தான். சன்னி லியோன் பால்கோவா மாதிரி தளதளன்னு இருக்காங்க. எல்லாம் உங்களுக்காகத்தான். இதெல்லாம் உங்க நெனப்புதான். எனக்காக இல்லை” என்றார். இதையடுத்து மேடையிலிருந்த ஜி.பி.முத்துவிடம் பால்கோவா கொண்டுவந்து கொடுக்கப்பட்டது. அதை வாங்கிய ஜி.பி. முத்து சன்னிலியோனுக்கு ஊட்டிவிட்டார். பிறகு சன்னிலியோனும் ஜி.பி. முத்துவிற்கு பால்கோவா ஊட்டிவிட்டார். இதைத் தொடர்ந்து பேசிய ஜி.பி.முத்து ”அன்றைக்கு என்னால் அவருடன் சேர்ந்து போட்டோ கூட எடுக்க முடியவில்லை. இன்றைக்கு நான் அவருக்கு பால்கோவா ஊட்டிவிட்டது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார். இதைக் கேட்ட சதீஷ் ”சன்னி லியோனுக்கு பால்கோவா ஊட்டி ஹீரோவையே கோபப்பட வைத்தார் ஜி.பி. முத்து என நாளைக்கு செய்தி வரப்போகுது” என கிண்டல் செய்தார்.

இதையடுத்து நிகழ்ச்சி தொகுப்பாளர், சன்னிலியோனுக்கு கவிதை ஏதாவது இருக்கா என ஜி.பி.முத்துவிடம் கேள்வி எழுப்பினார். “நம்ம கவிதையெல்லாம் வேறமாதிரி இருக்கும். அதை சொன்னா எழுந்து ஓடிடுவாங்க… வேண்டாம்” என்றார். இதையடுத்து சன்னி லியோனுக்காக ஒரு பாட்டு பாடிக் காட்டுங்க என்றார் சதீஷ். அதற்கு அதுவும் வேண்டாம் என தயங்கினார் ஜி.பி.முத்து. உடனே அவரை ‘சூர்யா’வாக (இது வேற சூர்யா) நினைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு பாட்டு தானா வரும் என்றார். இதைக் கேட்டு அசடு வழிந்தார் முத்து. உடனே ‘ஓ மை கோஸ்ட்’ பாடலுக்கு டான்ஸ் ஆடலாம் என்றார் சன்னி லியோன். சன்னி லியோன் டான்ஸ் ஆட அழைத்ததில் ஆனந்தம் அடைந்தார் ஜி.பி.முத்து. மேடையில் பாடல் இசைக்க, சன்னி லியோனும் ஜி.பி.முத்துவும் ஆட, ரசிகர்கள் கை தட்டி ரசிக்க நிகழ்ச்சி களைகட்டியது.

பிக்பாஸ் ஆறாவது சீசனில் இருந்து வெளியேறிய பின்பு ஜிபி முத்து பங்கேற்கும் முதல் சினிமா நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in