படப்பிடிப்பில் திடீர் விபத்து: கீழே விழுந்து பிரபல ஹீரோ காயம்

படப்பிடிப்பில் திடீர் விபத்து: கீழே விழுந்து பிரபல ஹீரோ காயம்

படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் பிரபல ஹீரோ தடுக்கி விழுந்ததில் காயம் அடைந்தார்.

பிரபல தெலுங்கு ஹீரோ கோபிசந்த். இவர் தமிழில் ’ஜெயம்’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இதற்குப் பிறகு தமிழில் கவனம் செலுத்தாத அவர், தெலுங்கில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். இவர், இப்போது ஸ்ரீவாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீவாஸ், கோபிசந்த் நடிப்பில் லக்ஷ்யம், லவுக்யம், பாலகிருஷ்ணா நடிப்பில் டிக்டேட்டர் உட்பட சில படங்களை இயக்கியவர்.

ஸ்ரீவாஸ் இயக்கத்தில் கோபிசந்த் இப்போது நடிக்கும் படத்தில், டிம்பிள் ஹயாதி நாயகியாக நடிக்கிறார். ஜெகபதி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங் மைசூரில் நடந்து வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் நடிகர் கோபிசந்த் காயமடைந்துள்ளார். இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இதுபற்றி இயக்குநர் ஸ்ரீவாஸ் கூறும்போது, ``படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் துரதிர்ஷ்டவசமாக கோபிசந்த், கால் சறுக்கி கீழே விழுந்தார். கடவுள் அருளால் அவருக்கு பெரிதாக ஏதும் ஆகவில்லை. அவர் நன்றாக இருக்கிறார். இந்தச் சம்பவம் குறித்து ரசிகர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம்’ என்று தெரிவித்துள் ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in