பிரபல நடிகரின் முன்னாள் மனைவியுடன் இசை அமைப்பாளர் காதல்?

அம்ரிதா சுரேஷ்
அம்ரிதா சுரேஷ்

பிரபல நடிகரின் முன்னாள் மனைவியை இசை அமைப்பாளர் ஒருவர் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

பிரபல இசையமைப்பாளர் கோபி சுந்தர். தமிழில், யாருடா மகேஷ், தோழா, பெங்களூர் நாட்கள் உள்பட சில படங்களுக்கு இசை அமைத்துள்ளார். மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். இவர், தனது சமூக வலைதள பக்கத்தில், பின்னணி பாடகி அம்ருதா சுரேஷுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோபி சுந்தர், அம்ரிதா
கோபி சுந்தர், அம்ரிதா

ஏற்கெனவே பிரியா என்பவருடன் திருமணமான கோபி சுந்தர் 2010 -ம் ஆண்டு அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். பின்னர் பாடகியான அபயா ஹிரன்மயி என்பவருடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் அம்ருதாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப் படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

இருவரும் காதலில் விழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களின் நண்பர்கள், சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in