'ஆர்ஆர்ஆர்' படப்பாடலுக்கு கோல்டன் குளோப் விருது: கீரவாணிக்கு இளையராஜா வாழ்த்து

'ஆர்ஆர்ஆர்' படப்பாடலுக்கு கோல்டன் குளோப் விருது:  கீரவாணிக்கு இளையராஜா வாழ்த்து

" உங்கள் அனைவரது கடின உழைக்குபூ கிடைத்த தகுதியான வெற்றி" என 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்ற 'நாட்டுக்கூத்து' பாடலுக்கு கோல்டன் குளோப் விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் படக்குழுவிற்கு இளையராஜா வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் 2022 மார்ச் மாதம் 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் வெளியாகி மகத்தான வெற்றி பெற்றது. இப்படத்தில் இடம் பெற்ற ‘நாட்டுக் கூத்து’ பாடலுக்கு ‘Best Original Song’ பிரிவில் கோல்டன் குளோப் விருது கிடைத்துள்ளது. சர்வதேச அளவில் திரைத்துறையில் இந்த விருது மிக முக்கிய விருதாக பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், "கீரவாணி, எஸ்.எஸ்.ராஜமவுலி, 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் உங்கள் அனைவரது கடின உழைப்புக்கு கிடைத்த தகுதியான வெற்றி. நான் மகிழ்ச்சி கொள்கிறேன். வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in