விஜய் பிறந்தநாளில் காத்திருக்கும் சம்பவம்... தயாரான ரசிகர்கள்!

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

நடிகர் விஜய் பிறந்தநாளுக்கு 'GOAT' படத்தின் அடுத்த சிங்கிள் வெளியிட இருப்பதாக இயக்குநர் வெங்கட்பிரபு கூறியுள்ளார். இந்த விஷயம் விஜய் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் வெங்கட்பிரபு தமிழ் திரையுலகில் இயக்குநராக ‘சென்னை 26’ படம் மூலம் அடியெடுத்து வைத்து 17 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைகிறது. இதனால், ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இன்னொரு பக்கம் கிரிக்கெட் மேட்ச் பார்த்து ரிலாக்ஸ் செய்து ட்வீட் போட்ட வெங்கட்பிரபுவிடம் 'GOAT' பட அப்டேட் கேட்கவும் ரசிகர்கள் தவறவில்லை.

விஜய்- யுவன் ஷங்கர் ராஜா
விஜய்- யுவன் ஷங்கர் ராஜா

சமீபத்தில் படத்தின் முதல் சிங்கிள், ரிலீஸ் தேதி என அடுத்தடுத்து அப்டேட் வெளியானது. யுவன் இசையில் வெளியான முதல் சிங்கிள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறாமல் ஏமாற்றத்தைக் கொடுத்தது. இருந்தாலும் ஒரு பாட்டை வைத்து மட்டுமே யுவன் மீது நெகட்டிவ் விமர்சனம் வைக்க வேண்டாம் எனவும் சொல்லி வந்தனர் விஜய் ரசிகர்கள்.

இதனால், அடுத்தப் பாடலாவது தங்களுக்குப் பிடித்தபடி இருக்குமா என்ற எதிர்பார்ப்பில் ’இரண்டாவது சிங்கிள் எப்போது வெளியாகும்?’ என வெங்கட்பிரபுவிடம் ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் அப்டேட் கேட்டுள்ளனர். இதற்கு ஜூன் மாதம் வெளியாகும் எனக் கூறியுள்ளார் அவர்.

விஜய், வெங்கட்பிரபு
விஜய், வெங்கட்பிரபு

அதாவது, நடிகர் விஜயின் பிறந்தநாள் ஜூன் மாதம் வருகிறது. இதைக் கொண்டாடும் விதமாக இரண்டாவது சிங்கிள் வெளியிடுகிறோம் என கூறியுள்ளார் வெங்கட்பிரபு. இந்த செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


தீவிரவாதிகள் தாக்குதலில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணம்; 6 பேர் படுகாயம்

மார்க் நெக்ஸ்ட்... ஸ்கில்ஸ் ஃபர்ஸ்ட்... பள்ளி மாணவர்களுக்கான டிப்ஸ்!

பீகாரில் இருந்து உ.பி.,க்கு 95 குழந்தைகள் கடத்தல்? - அதிரடியாக மீட்ட குழந்தைகள் நல ஆணையம்!

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம்... அமெரிக்காவில் கோவை மாணவி கைது!

சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட வழக்கு... போர்ச்சுகல் நாட்டில் அன்மோல் பிஷ்னோய் பதுங்கலா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in